சுரங்கத்தை விரிவுபடுத்தி 2-வது பிளான்ட் அமைக்க வேண்டும்-செந்தில்நாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


சுரங்கத்தை விரிவுபடுத்தி 2-வது பிளான்ட் அமைக்க வேண்டும்-செந்தில்நாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையில் சுரங்கத்தை விரிவுபடுத்தி 2-வது பிளான்ட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை சட்டமன்ற தொகுதி செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையில் சுரங்கத்தை விரிவுபடுத்தி 2-வது பிளான்ட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை சட்டமன்ற தொகுதி செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

யோகா வகுப்புகள்

சிவகங்கை சட்டமன்ற தொகுதி செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு மகளிர் கல்லூரியிலும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி பயிற்றுனர்கள் நியமிக்கப்பட வேண்டும். அத்துடன் அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளிலும் யோகா வகுப்புகளை தொடங்க வேண்டும். அங்கு நிரந்தரமாக யோகா பயிற்றுனர்களை நியமிக்க வேண்டும். தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி தர வேண்டும். மாவட்டத்தில் காலியாக உள்ள 80 ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். சிவகங்கை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். சிவகங்கை பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து நகருக்கு சுற்றுச்சாலை அமைத்து தர வேண்டும்.

கிராபைட் தொழிற்சாலை

இதேபோல கல்லல் மற்றும் காளியம்மன் கோவிலில் தனி பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும். மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை டாக்டர் மற்றும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் கல்லல் மற்றும் காளையார்கோவிலுக்கு புதிய பஸ் இயக்க வேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிப்பு, ஆளுனர் படிப்பும் அமைத்து தர வேண்டும். மதகுபட்டியை தனி ஒன்றியமாக அமைத்து தர வேண்டும். சிவகங்கையை அடுத்த கோமாளிப்பட்டியில் உள்ள கிராபைட் தொழிற்சாலையில் 2-வது பிளான்ட் அமைக்கவும் சுரங்கத்தை விரிவு படுத்தவும் தரம் உயர்ந்த செறியூட்டப்பட்ட கிராபைட் உற்பத்தி செய்வதற்கும் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அத்துடன் உப தொழில்களை கொண்டு வர வேண்டும்.

1947-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் சுழற்சியில் பி.எஸ்சி. தாவரவியல்,, பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளை தொடங்க அனுமதிக்க வேண்டும். மேலும் முதல் சுழற்சியில் எம்.பி.ஏ. முதுகலை பாடப்பிரிவினை தொடங்க வேண்டும். என்பது உள்பட சிவகங்கை தொகுதி மக்களுக்கு தேவையான 42 கோரிக்கைகள் குறித்து அரசுக்கு கொடுத்துள்ளேன். இது குறித்து சட்டமன்றத்திலும் பேச உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story