மதுரை மாநாடு தொடர்பாக சிவகங்கையில் இன்று அ.தி.மு.க.ஆலோசனை கூட்டம் தொண்டர்கள் திரளாக பங்கேற்க செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அழைப்பு
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு தொடர்பாக சிவகங்கையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு தொடர்பாக சிவகங்கையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கை முத்து மகாலில் இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணி அளவில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொதுச்செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்பு செயலாளர்கள் செங்கோட்டையன், தங்கமணி, செல்லூர் ராஜு, கோகுல இந்திரா, ராஜன் செல்லப்பா, தலைமை நிலைய செயலாளர் வேலுமணி, மகளிர் அணி செயலாளர் வளர்மதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி. உதயகுமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
திரளானோர் பங்கேற்க அழைப்பு
எனவே சிவகங்கை மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, நிர்வாகிகள் நகர், ஒன்றிய, பேரூர் கழக, ஊராட்சி கழக, கிளைக்கழக நிர்வாகிகள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத்தொண்டர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.