வாரச்சந்தை ரூ.7.17 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது


வாரச்சந்தை ரூ.7.17 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது
x

செந்துறை வாரச்சந்தை ரூ.7.17 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறையில் வார சந்தை இயங்கி வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கான ஏலம் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஏலம் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் ஏலம் எடுக்கப்பட்டு, வரிகள் உள்பட ஏலத்தொகையான ரூ.7 லட்சத்து 17 ஆயிரம் பஞ்சாயத்திற்கு கட்டப்பட்டது. ஏலத்தின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க செந்துறை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story