தமிழகத்தில் தனிகல்விக்கொள்கை உருவாக்கி தேசிய கொள்கையை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்- மக்கள் கல்வி கூட்டியக்கம் வலியுறுத்தல்


தமிழகத்தில் தனிகல்விக்கொள்கை உருவாக்கி தேசிய கொள்கையை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்- மக்கள் கல்வி கூட்டியக்கம் வலியுறுத்தல்
x

தமிழகத்துக்கு தனி கல்விக்கொள்கையை உருவாக்கி, தேசிய கல்விக்கொள்கையை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் கல்வி கூட்டியக்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.

மதுரை


தமிழகத்துக்கு தனி கல்விக்கொள்கையை உருவாக்கி, தேசிய கல்விக்கொள்கையை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் கல்வி கூட்டியக்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.

மாநில கல்விக்கொள்கை

தேசியகல்விக்கொள்கை 2020-ஐ முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு தமிழகத்தின் பல்வேறு கல்வி நலன் சார்ந்த அமைப்புகள் ஒன்றிணைந்து மதுரையில் மக்கள் கல்வி கூட்டியக்கம் தொடங்கியுள்ளன. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டுக்கு தனி கல்விக்கொள்கையை உருவாக்கவும், தேசிய கல்விக்கொள்கையை முற்றிலும் நிராகரிக்கவும் மதுரையை தலைமையகமாக கொண்டு மக்கள் கல்வி கூட்டியக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். வெவ்வேறு பெயர்களில் தேசிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்களை தமிழகத்தில் நிறைவேற்றுவதை தவிர்க்க வேண்டும். தமிழகத்திற்கான மாநில கல்விக்கொள்கை மக்கள் நலனுக்கான, சமத்துவத்தை வலியுறுத்தும் கொள்கையாக இருக்க வேண்டும். பேராசிரியர் ஜவகர்நேசன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

பல வருடங்களாக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த லஞ்ச ஊழலை விசாரிக்க தனிப்படை அமைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படை தன்மையை பின்பற்ற வேண்டும். மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை வெளிப்படையாக மக்கள் அறியும் வண்ணம் அறிவிக்க வேண்டும். விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிப்பட்ட சட்ட அதிகாரம் கொண்ட குறைதீர்க்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்.

முழுநேர ஆசிரியர்கள்

ஒப்பந்த ஆசிரியர், பகுதி நேர, வருகை ஆசிரியர் போன்ற நியமன முறையை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, முழு நேரப் பணியாளர்களாக ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். சுயநிதி கல்லூரிகளில் மிக குறைந்த சம்பளத்திற்கு எந்தவித பணிப்பாதுகாப்பும் இல்லாமல் பணியாற்றி வரும் பேராசிரியர்களின் நிலை மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள சம்பளத்தை சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அரசு விதிகளை மீறும் சுயநிதி கல்லூரிகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். வருங்காலங்களில் புதிய பாடத்திட்டங்களுடன் அரசுக் கல்லூரிகள் அதிகம் உருவாக்கி தனியார் சுயநிதி கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டும்.

நீட், நெக்ஸ்ட் தேர்வு தடை

நீட், கியூட், நெக்ஸ்ட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை தடை செய்ய வேண்டும். அரசுப்பள்ளிகளில் அனைவருக்கும் இலவச, தரமான கல்வியை வழங்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கை, படிப்படியாக மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பரிந்துரைகளை செயல்படுத்த வாரம் ஒரு சுற்றறிக்கை பல்கலைக்கழக மானியக்குழுவால் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் மாநில அரசு இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பை மட்டும் காட்டுகிறது. உயர்கல்வித்துறை செயலாளர், துணைவேந்தர் ஆகியோர் அதனை அப்படியே செயல்படுத்துகின்றனர். இதனால் அரசுக்கல்லூரிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story