மருத்துவ சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்பில் தனி உள்ஒதுக்கீடு நாகர்கோவிலில் நடந்த மாநாட்டில் கோரிக்கை
மருத்துவ சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்பில் தனி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
நாகர்கோவில்:
மருத்துவ சமுதாயத்தினருக்கு
வேலைவாய்ப்பில் தனி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று
நாகர்கோவிலில் நடந்த மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
குமரி மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியல் அதிகாரத்தில் பங்குபெற தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். முடி திருத்துவோர் நல கழகம் அமைக்க வேண்டும். கிறிஸ்தவ மதத்தை தழுவிய மருத்துவர் சமூக மக்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும். முடி திருத்தும் கடை நடத்துபவர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.