முகாம் நிறைவு விழா


முகாம் நிறைவு விழா
x

சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.

தஞ்சாவூர்

சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா சுவாமிநாதசாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மாணிக்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஷபானா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் குணாளன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இதில் சுவாமிமலை பேரூர் மன்ற தலைவர் வைஜெயந்தி சிவகுமார். இந்திய நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவியுள்ள நடராஜர் சிலையை வடிவமைத்த தேவ ராதாகிருஷ்ணன் ஸ்தபதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் உதவி திட்ட அலுவலர் வைத்தியநாதன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாணவன் ராஜா நன்றி கூறினார்.

1 More update

Next Story