தொடர் இருசக்கர வாகன திருட்டு: 2 பேர் கைது - 5 மணி நேரத்தில் 30 இருசக்கர வாகனங்கள் மீட்பு
ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகன திருடர்களை கண்டுபிடித்து, 5 மணி நேரத்தில் 30 வாகனங்களை போலீசார் மீட்டனர்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகன திருடர்களை கண்டுபிடித்து, 5 மணி நேரத்தில் 30 வாகனங்களை போலீசார் மீட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில், இருசக்கர வாகன திருட்டு அதிகரித்து வந்த நிலையில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் முப்பதுவெட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அஜித்குமார் மற்றும் சூர்யா என்ற இரு இளைஞர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 30 இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளின் மூலம் அவர்களை குற்றவாளிகள் என உறுதி செய்த போலீசார், அடுத்த 5 மணி நேரத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.
மேலும் திருட்டில் ஈடுபட்ட சரத் மற்றும் சஞ்சய் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story