இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு


இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு
x
தினத்தந்தி 17 March 2023 12:00 AM IST (Updated: 17 March 2023 12:00 AM IST)
t-max-icont-min-icon

மண்மலை கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மண்மலை கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வாகனங்கள் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்தை சார்ந்த அன்பு, சுப்பிரமணி, ஏழுமலை, அண்ணாமலை, பிரகாஷ் ஆகியோரின் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது தவிர கச்சிராயப்பாளையம், எடுத்தவாய்நத்தம், கரடிசித்தூர், செல்லம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போய் உள்ளது. இது குறித்து வாகனத்தின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மண்மலை கிராமத்தில் தொடர்ந்து வாகனங்கள் திருட்டு நடந்து வரும் நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலையிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் எங்கள் கிராமத்தில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், தொடர்ந்து வாகன திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருடு போன வாகனங்களை மீட்டு தருவதாக உறுதி அளித்தனர்.


Next Story