தொடர் விடுமுறை எதிரொலி; திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்


தொடர் விடுமுறை எதிரொலி; திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

தொடர் விடுமுறையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

காரைக்கால்,

ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய தொடர் விடுமுறைகள் எதிரொலியாக காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வருகை தந்தனர். இதனால் திருநள்ளாறு பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


1 More update

Next Story