வாகனம் மோதி 2 குழந்தைகள் படுகாயம்


வாகனம் மோதி 2 குழந்தைகள் படுகாயம்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 1:00 PM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் புதுதெருவை சேர்ந்தவர் முகமது. காய்கறி வியாபாரியான இவரது குழந்தைகளான மகன் முகமதுஅஸ்லம் (வயது 6), மகள் அப்சரா பானு (4) ஆகிய இருவரும் மதுரை ரோட்டில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் 2 பேர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிறுவன் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

இது குறித்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story