மதுரை ரெயில் நிலையத்தில் சர்வர் பிரச்சினை: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி


மதுரை ரெயில் நிலையத்தில் சர்வர் பிரச்சினை: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி
x

மதுரை ரெயில் நிலையத்தில் சர்வர் பிரச்சினையால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்தனர்.

மதுரை


மதுரை ரெயில் நிலையத்தில் சர்வர் பிரச்சினையால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்தனர்.

முன்பதிவு

மதுரை ரெயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவுவாயில் பகுதியில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மேற்கு நுழைவுவாயில் பகுதியில் ஒரு டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டரும், கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் தரைத்தளத்தில் ஒரு கவுண்ட்டரும், முதல் மாடியில் 3 கவுண்ட்டர்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த டிக்கெட் கவுண்ட்டர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும். இங்கு ஒவ்வொரு கவுண்ட்டரிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 130 முதல் 140 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுகின்றன. இது தவிர, குழு டிக்கெட் முன்பதிவும் தனியாக மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிடையே, ரெயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக உறுதி செய்யப்பட்ட இருக்கைகளுக்கான தட்கல் ஒதுக்கீட்டில், காலை 10 மணிக்கு குளிரூட்டப்பட்ட வகுப்புகளுக்கான முன்பதிவும், காலை 11 மணிக்கு தூங்கும் வசதி மற்றும் உட்காரும் வசதி இருக்கை வகுப்புகளுக்கான முன்பதிவும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஒவ்வொரு கவுண்ட்டரிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 முதல் 20 டிக்கெட்டுகள் வரை இருக்கை உறுதி செய்யப்பட்ட தட்கல் முன்பதிவு செய்யப்படுகின்றன. அதனை தொடர்ந்து தட்கல் காத்திருப்போர் பட்டியல் முன்பதிவு செய்யப்படுகிறது.

பயணிகள் அவதி

இந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு குளிரூட்டப்பட்ட இருக்கைகளுக்கான தட்கல் முன்பதிவு தொடங்கி முடிந்தது. 2-ம் வகுப்பு தூங்கும் வசதி மற்றும் இருக்கை வசதி பெட்டிகளுக்கான முன்பதிவு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முன்பதிவு மைய பணிகள் முடங்கியது. இதனால் தூங்கும் வசதி பெட்டிகளுக்கும், வைகை, இன்டர்சிட்டி, குருவாயூர் போன்ற இருக்கை வசதி பெட்டிகளுக்கான தட்கல் முன்பதிவு செய்ய வந்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சர்வர் தொழில்நுட்ப கோளாறு பிரச்சினையால் வழக்கமான டிக்கெட் முன்பதிவு செய்ய வந்திருந்த பயணிகளும் சிரமத்திற்கு ஆளாயினர். அதே சமயத்தில் ஆன்லைன் மூலம் தட்கல் மற்றும் சாதாரண டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story