நெல் தரிசில் எள் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்
நெல் தரிசில் எள் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என வேளாண் உதவி இயககுனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா கூறினார்.
நெல் தரிசில் எள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என வேளாண் உதவி இயககுனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எள் சாகுபடி
நெல் அறுவடைக்குப்பின் நிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்பு 20 கிலோ மணல் அல்லது 20 கிலோ நாட்டு எருவுடன் எள் விதைகளை கலந்து சீராக தெளிக்க வேண்டும். எள்ளை பொருத்தவரை தண்ணீர் அதிகமாக தேவைப்படாது. செடியை வாட விட்டு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தண்ணீர் கட்டினால் நன்கு காய் பிடிக்கும்.
மானாவாரிக்கு ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படும். விதை நேர்த்தி செய்து தெளித்தால் அதிக லாபம் பெறலாம். 100 கிராம் சூடோமோனஸ், 100 கிராம் அசோஸ்பைரில்லத்துடன் விதைகளை சேர்க்க வேண்டும்.
பயிர் மேலாண்மை
வடித்த கஞ்சியை ஆறவைத்து அதில் விதைக்கலவையை சேர்க்க வேண்டும். ஒரு மணி நேரம் நிழலில் உலர்த்தி எடுத்து விதைத்தால் நோய்களிலிருந்து எள் பயிரை பாதுகாக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு 30 கிலோ யூரியா, 60 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாசியம் என்ற அளவில் உரம் இடவேண்டும். மேலே குறிப்பிட்ட பயிர் மேலாண்மை முறைகளை பின்பற்றி நெல் தரிசில் எள் பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம் தெரிவித்துள்ளார்.