2 கார்களுக்கு தீவைப்பு


2 கார்களுக்கு தீவைப்பு
x
தினத்தந்தி 3 Sept 2023 12:45 AM IST (Updated: 3 Sept 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

2 கார்களுக்கு தீவைப்பு

கோயம்புத்தூர்

ரத்தினபுரி

ரத்தினபுரியில் 2 கார்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

2 கார்களுக்கு தீ வைப்பு

கோவை ரத்தினபுரி பகுதியில் நேரு வீதி உள்ளது. அங்குள்ள பள்ளி அருகே அந்த பகுதியில் உள்ள பெரியார் வீதியைச் சேர்ந்த இரண்டு பேர் தங்களுக்கு சொந்தமான 2 கார்களை நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைத்திருந்தனர். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் 2 கார்களுக்கும் தீ வைத்து விட்டு, தப்பி சென்றனர்.

இதில் அந்த கார்கள் மளமளவென தீ பிடித்து எரிவதை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையம் மற்றும் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மர்ம நபர்கள்

ஆனால் அதற்குள் ஒரு கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மற்றொரு கார் முன் பகுதி மட்டும் எரிந்தது.முற்றிலும் எரிந்த கார் ரத்தினபுரி பெரியார் வீதியை சேர்ந்த மாசிலாமணி என்பவரது மகன் ஆனந்தகுமார் (வயது47) என்பவருக்கு சொந்தமானது.

இவர் சோலார் பேனல்கள் அமைத்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்களை தீவைத்து எரித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story