மயிலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையத்தை அதிகாரிகள் ஆய்வு
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு
தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் நடக்கிறது. இதற்காக பவானியில் பவானி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மயிலம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 5-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு்ள்ளன.
இதில் மயிலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் மாநில டி.என்.பி.எஸ்.சி. இயக்குனர் கிருஷ்ணகுமார், பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் இளஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் விஜய கோகுல் உள்பட பலர் ஆய்வு செய்தனர். பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் உள்ளதா? தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏதேனும் இடையூறு உள்ளதா? பஸ் போக்குவரத்து வசதிகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பவானி வட்டாரத்தில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான கேள்வித்தாள் அனைத்தும் பவானி கருவூலத்திற்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அறை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.