மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைப்பது சரியானது இல்லை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைப்பது சரியானது இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை,
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
தமிழகத்தில் 2.25 இலட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பேரடியாக உள்ளது.
மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தது விளம்பர அறிவிப்பு, கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார், மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள 2 தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை.
போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல, அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் டைடல் பார்க் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கண்ணின் பார்வையை அழித்து விட்டு ராஜபார்வை என சொல்லவது போல டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது. திமுகவின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்தது. டைடல் பார்க் கட்டுவது சிறுவர் பூங்கா அமைப்பது போல அல்ல, அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கி டைடல் பார்க் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.