மக்கள் நீதிமன்றத்தில் 254 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 254 வழக்குகளுக்கு தீர்வு
x

சீர்காழியில் மக்கள் நீதிமன்றத்தில் 254 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கினார். நீதிபதி ரங்கேஸ்வரி, வக்கீல் சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் ஞானபிரகாசம் வரவேற்றார். முகாமில் காசோலை வழக்கு, மோட்டார் வழக்கு, குற்றவழக்கு, குடும்பத்தகராறு உள்ளிட்ட 254 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ 5 லட்சத்து 17 ஆயிரத்து 700 வசூல் செய்யப்பட்டது. இதில் வக்கீல்கள் முத்துக்குமார், கார்த்திக் ராஜன், சுதா, பாலசுப்பிரமணியன், கார்த்திக், நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story