118 வழக்குகளுக்கு தீர்வு
118 வழக்குகளுக்கு தீர்வு
கோயம்புத்தூர்
கோவை
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி எம்.என்.செந்தில்குமார் ஆலோசனையின் படி கோவை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் எஸ்.குமரகுரு, பி.எஸ்.கலைவாணி ஆகியோர் அடங்கிய குழு நிலுவையில் இருந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தியது.
நில ஆர்ஜித வழக்கு, காசோலை வழக்கு, சமரசம் செய்யக்கூடிய இதர வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 118 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் மொத்த தீர்வு தொகை ரூ.31 கோடியே 25 லட்சத்து 3 ஆயிரத்து 965 ஆகும். இதற்கான ஏற்பாடுகளை செயலாளர் கே.எஸ்.எஸ். சிவா செய்து இருந்தார்.
Related Tags :
Next Story