132 வழக்குகளுக்கு தீர்வு
132 வழக்குகளுக்கு தீர்வு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சார்பு நீதிமன்றம் சார்பில் ஒவ்வொரு மாதமும் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது. அதன்படி சப்-கோர்ட்டு மற்றும் ஜே.எம்.1, ஜே.எம்.2, கூடுதல் முதன்மை உரிமையியல் நீதிமன்ற வளாகங்களில் லோக் அதாலத் நடந்தது. இதற்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட நீதிபதி பாலு தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி மோகனவள்ளி, மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜன், ஜே.எம்.2 நீதிபதி மணிகண்டன், வக்கீல்கள் சங்க தலைவர் துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்துக்கள், செக் மோசடி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரான வழக்குகள், ஜீவனாம்சம், வங்கிகள் மூலம் தொடரப்பட்ட வழக்கு, விபத்து காப்பீட்டு வழக்கு, உணவு கலப்பட வழக்கு என மொத்தம் 1,010 வழக்குகளில் 132 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.5 கோடியே 51 லட்சத்து 96 ஆயிரத்து இழப்பீடு சமரசம் செய்யப்பட்டதாக வட்ட சட்டப்பணிக்குழுவினர் தெரிவித்தனர்.
----------------