நிலப்பிரச்சினை தீர்வு முகாமில் 14 மனுக்களுக்கு தீர்வு
நிலப்பிரச்சினை தீர்வு முகாமில் 14 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை, குன்னம் தாலுகா வருவாய் துறையினர் இணைந்து பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் முகாம், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி குன்னம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர், குன்னம் தாசில்தார் அனிதா, சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நல்லம்மாள், ஏட்டு பாலமுருகன் துணை தாசில்தார் பிரேமா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் மொத்தம் 14 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story