மக்கள் நீதிமன்றத்தில் 1,625 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 1,625 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,625 வழக்குகளில் சமரச தீர்வு மூலம் ரூ.11 கோடியே 58 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,625 வழக்குகளில் சமரச தீர்வு மூலம் ரூ.11 கோடியே 58 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.

லோக் அதாலத் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார்.

கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், மகளிர் நீதிமன்ற நீதிபதி விர்ஜின்வெஸ்டா, நீதித்துறை நடுவர் எண்.1 நீதிபதி சிட்டிபாபு, எண்.2 நீதிபதி பிரபாகரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி விஜயா லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) நிகழ்வில் தீர்வு காணப்படும் வழக்குகளில் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது. இருதரப்பினருக்கும் வெற்றி தோல்வி என்ற நிலை இருக்காது. கோர்ட்டு கட்டணம் திருப்பி தரப்படும். இதுபோன்ற லோக் அதாலத் நிகழ்வினை வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் பயன்படுத்தி சமரச தீர்வு மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். வழக்காடிகளும், வக்கீல்களும் இதுபோன்ற சமரச தீர்வு முறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எந்த ஒரு பிரச்சினையும் கையை மீறி போகும்போது சமரசம் செய்து வைக்க கூடிய இதுபோன்ற நிகழ்வினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1,625 வழக்குகளுக்கு தீர்வு

நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் 15 அமர்வுகளாக நடைபெற்ற இந்த லோக் அதாலத் நிகழ்வில் மொத்தம் 1,625 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரச தீர்வு மூலம் முடிவு காணப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ.11 கோடியே 58 லட்சத்து 19 ஆயிரத்து 404 மதிப்பில் தீர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் வக்கீல் சங்க தலைவர் சேக்இப்ராகிம் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story