பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாமில் 37 மனுக்களுக்கு தீர்வு


பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாமில் 37 மனுக்களுக்கு தீர்வு
x

குரும்பலூரில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாமில் 37 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், பெரம்பலூர் ஆர்.டி.ஓ.வுமான (பொறுப்பு) பால்பாண்டி தலைமை தாங்கி பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 45 மனுக்களை பெற்றார். அதில் 37 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 8 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இதில் வட்ட வழங்கல் அலுவலர் பெரியண்ணன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் சகரியா, குரும்பலூர் கிராம நிர்வாக அலுவலர்கள் கெஜலட்சுமி (வடக்கு) செல்வி (தெற்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story