குமரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 94 வழக்குகளுக்கு தீர்வு


குமரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 94 வழக்குகளுக்கு தீர்வு
x

குமரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 94 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை ஆகிய 4 கோர்ட்டுகளில் நேற்று லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நம்பிராஜன் தொடங்கி வைத்தார். 4 கோர்ட்டுகளிலும் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள், அசல் பண பரிவர்த்தனை வழக்குகள் என மொத்தம் 90 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 38 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 21 லட்சத்து 49 ஆயிரத்து 809 இழப்பீடு வழங்கப்பட்டது.

இதேபோல் கோர்ட்டு விசாரணைக்கு வராத வழக்குகள் 56 எடுத்துக்கொள்ளப்பட்டு 56-க்கும் தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் ரூ.1 கோடியே 46 லட்சத்து 79 ஆயிரத்து 970 பைசல் செய்யப்பட்டது. மொத்தம் 146 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 94 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, அதற்கான பணம் ரூ.3 கோடியே 68 லட்சத்து 29 ஆயிரத்து 779 பைசல் செய்யப்பட்டது.


Next Story