சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
நாகை நீலா கீழவீதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நாகை நீலா கீழவீதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாதாள சாக்கடை
நாகை - நாகூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடையில் அவ்வப்போது ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடுகிறது.
இந்த நிலையில் நாகையின் முக்கிய வணிக வளாகங்கள் நிறைந்த நீலா கீழவீதியில், பெரிய கடை தெரு செல்லும் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, அங்குள்ள வீடு மற்றும் கடைகளின் வாசல் வழியாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
தொற்று நோய்
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே இந்த பாதாள சாக்கடையை சீரமைத்து பொதுமக்கள் அச்சமின்றி சென்று வர உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள், கடைகாரர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.