குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும்


குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும்
x

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

விருதுநகர்

சாத்தூர்,

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நகரசபை கூட்டம்

சாத்தூர் நகரசபையின் கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் அசோக், நகராட்சி ஆணையாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி சுரேஷ், பணி மேற்பார்வையாளர் விசாகாலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் தங்களது வார்டுகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வினியோகிக்கப்படுவதாக புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கவுன்சிலர்கள் கற்பகவள்ளிமுருகன், செண்பகவல்லி, ஏஞ்சல் மற்றும் சுபிதா ஆகியோர் புகார் கூறினர்.

விரைவில் தீர்வு

மேலும் கிருமிநாசினி, சுண்ணாம்பு வாங்குவது மற்றும் இருப்பு இருப்பதில் வெளிப்படை தன்மை வேண்டும் என்று கவுன்சிலர் முருகன் கூறினார். மேலகாந்தி நகர் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் தன்மை குறித்து பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவு தெரியாத நிலையில் அந்தப்பள்ளியை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை தற்சமயம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கவுன்சிலர் கார்த்தி கோரிக்கை வைத்தார். இந்த கூட்டத்தின் முடிவில் கவுன்சிலர்கள் கூறிய அனைத்து குறைகளும் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என தலைவர் குருசாமி கூறினார். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Next Story