திண்டல் வித்யா நகரில் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; நோய்கள் பரவும் அபாயம்


திண்டல் வித்யா நகரில் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; நோய்கள் பரவும் அபாயம்
x

திண்டல் வித்யா நகரில் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; நோய்கள் பரவும் அபாயம்

ஈரோடு

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திண்டல் வித்யா நகரில் வெற்றி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியை ஒட்டி 25-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஒரு குடியிருப்பு பகுதியின் முன்பு சாலையை ஒட்டி கழிவுநீர் தேங்கி உள்ளது. இதில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, 'இங்கு சாலை மேம்பாட்டு பணிக்காக பள்ளம் தோண்டியபோது சாக்கடை குழாய்கள் துண்டிக்கப்பட்டன. அப்போது பணிசெய்தவர்கள் உடனடியாக சரி செய்வதாக கூறினார்கள். ஆனால் ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த சாக்கடை கண்டுகொள்ளப்படாமல் கிடக்கிறது. குழந்தைகள், முதியோர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் கொசுக்கள் மற்றும் துர்நாற்றத்தால் உடல் பாதிப்பு ஏற்படும் என்று அச்சப்படுகிறோம். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story