கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி


கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடிகால் வாய்க்கால் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும்பணி நடைபெற்றது. இதை நகராட்சி ஆணையாளர் கீதா நேரில் சென்று பார்வையிட்டார். திருக்கோவிலூர் கிழக்கு வீதி மற்றும் சன்னதி தெருவில் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணியை நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் நேரில் பார்வையிட்டு பணியை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். அப்போது வர்த்தக சங்க தலைவர் ராஜா, திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆதி. நாராயணமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story