ரூ.10 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை


ரூ.10 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை
x

ரூ.10 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாட்டிக்குளம் பகுதியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவரும், நகராட்சி உறுப்பினருமான டி.கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கல்பனா, நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் பழனி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கழிவுநீர் கால்வாய் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். அப்போது தரமான பொருட்களை கொண்டு பணி செய்ய வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து திருத்தணி சாலையில் உள்ள திருவள்ளூர் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. நகராட்சி வார்டு உறுப்பினர் மோகனா சண்முகம் தலைமையில், ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் ராஜா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பட்டறை மணி, ஒப்பந்ததாரர் தயாநிதி மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story