கழிவுநீர், ஏரி நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி


கழிவுநீர், ஏரி நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி
x

கழிவுநீர், ஏரி நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

கந்திலி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த கிராம வேளாண் திட்டத்தின் கீழ் சேலத்தார் வட்டம் பகுதியில் அமைந்துள்ள நாரியப்பன் நாயக்கன் ஏரியிலிருந்து செல்லரப்பட்டி கருப்புஏரி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஏரி கால்வாய்களை தூர் வாரும் பணியினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆர். ஆனந்தன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தர் வரவேற்றார். உதவி பொறியாளர் மகேந்திரவர்மன் முன்னிலை வகித்தார்.

ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கால்வாய்களை தூர்வாரும் பணிகளை பூஜை போட்டு தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய செயலாளர்கள் கே.குணசேகரன், கே.முருகேசன் கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோன்று எலவம்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் இருந்தும், வடக்குமேடு பகுதியில் இருந்தும் கழிவு நீர் கால்வாய் புதிதாக அமைக்க ரூ.11 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு நல்லதம்பி எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்.


Next Story