நொய்யல் ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்


நொய்யல் ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்
x

நொய்யல் ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கோயம்புத்தூர்

நொய்யல் ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறை தீர்க்கும் கூட்டம்

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி:- செட்டிபாளையத்தில் உள்ள 16 ஏக்கர் காடுகுட்டைக்கு மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். எனவே விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஒண்டிபுதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இங்கு தண்ணீர் கொண்டு செல்ல பணிகள் முடிக்கப்பட்டு 2 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதற்குஇலவசமாக மின்சாரம் அளிக்க இருக்கும்.

நொய்யல் ஆற்றில் கழிவுகள்

நொய்யல் ஆற்றில் ஏராளமான கழிவுகள் கலக்கப்படுகிறது. கோவை மாநகர பகுதியில் நொய்யல் ஆற்றில் சாக்கடை தண்ணீர் மற்றும் கழிவுகள் அதிகளவில் கலக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கம் வேணுகோபால்:- கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.

தண்ணீர் திருட்டு

மெடிக்கல் பரமசிவம்:- ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத் துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் அரசாணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

ஆனைமலை -நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.ஏ.பி. திட்டத்தில் தண்ணீர் திருடப்படுகிறது. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வது இல்லை. எனவே தண்ணீர் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

கோவை மாவட்டத்தில் சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. அங்கு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் ஆற்றில் சாக்கடை தண்ணீர் மற்றும் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்என்று விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

1 More update

Next Story