கழிவுநீர் கால்வாய் அடைப்பு நீக்கும் பணி
பனப்பாக்கம் பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு நீக்கும் பணி நடந்தது.
ராணிப்பேட்டை
பனப்பாக்கம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் பேரூராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுவதும் நிரம்பி அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்புகளால் கழிவுநீர் வெளியே வர ஆரம்பித்தது. உடனே அனைத்து கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்ற பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அண்ணா நகர், 3-வது வார்டில் உள்ள கழிவுநீர் கால்வாயில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், மண் ஆகியவற்றை அகற்றி தூர்வாரும் பணி பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் அப்பகுதியில் டெங்கு, மலேரியா வராமல் தடுக்க கொசு மருந்தும் அடிக்கப்பட்டது.
Related Tags :
Next Story