மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம்
குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் ஊனமுற்றோர் நலத்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் ஆனந்தராஜ் காப்பீடு திட்டம் குறித்து பேசினார்.
இதில் அரசு மருத்துவர்கள், அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பு பள்ளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 168 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் கலந்து கொண்டு 10 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களும், ஒரு மாணவிக்கு காது கேட்கும் கருவியும்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.பிரபாகரன், ஏ.வி.மகாலிங்கம், கே.தண்டபாணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு தொண்டு அமைப்புகள் செய்திருந்தன.