ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம்; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்


ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம்; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்
x

கல்லிடைக்குறிச்சியில் ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரத்தை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார் .

திருநெல்வேலி

அம்பை:

அம்பை சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான இசக்கி சுப்பையா கல்லிடைக்குறிச்சி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து 3 ஏழை பெண்களுக்கு சுய தொழில் புரிந்திட தனது சொந்த நிதியில் தையல் எந்திரங்களை இலவசமாக வழங்கினார்.

சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் மாரி செல்வம், நகர செயலாளர் முத்துகிருஷ்ணன், மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு, கவுன்சிலர்கள் மாரி ராஜ், முத்துகுமார், மாநில பேச்சாளர் மின்னல் மீனாட்சி, அம்பை ஒன்றிய துணை செயலாளர் பிராங்களின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story