கல்லூரி மாணவிகளுக்கு தையல் பயிற்சி வகுப்பு


கல்லூரி மாணவிகளுக்கு தையல் பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவிகளுக்கு தையல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே பள்ளத்தூர், சீதாலெட்சுமி கல்லூரியில் சுயநிதி பிரிவு சார்பாக மாணவிகளுக்கு, தையல், அழகுக்கலை மற்றும் எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் பள்ளி பேராசிரியைகள் பொன்னழகு, ஸ்டெல்லா மற்றும் கரோலின் மணிஷா ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவிற்கு கல்லூரி செயலர் அண்ணாமலை மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி துறைத்தலைவர் சித்ரா ஜூலியட் வரவேற்றார். கல்லூரி முதல்வர் விஜயராணி தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக திருமாமகல் மற்றும் நாகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் வழங்கினர். முன்னதாக பேராசிரியை ஸ்வேதா மற்றும் ஜெயராமு ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முடிவில் வீரமுத்து நன்றி கூறினார்.

1 More update

Next Story