ஈரோட்டில் படிக்கும் கல்லூரி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


ஈரோட்டில் படிக்கும் கல்லூரி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x

ஈரோட்டில் படிக்கும் கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் படிக்கும் கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கல்லூரி மாணவி

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 3-ம் ஆண்டில் படித்து வரும் இந்த மாணவி சில மாதங்களுக்கு முன்பு அவருடைய தாயாரின் செல்போனை பயன்படுத்தி வந்தார். அதில் டெலிகிராம் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தினார். கடந்த ஜூன்மாதம் அந்த செயலியில் இருந்து மாணவிக்கு சில படங்கள் வந்தன. அதில், சம்பந்தப்பட்ட மாணவியின் படத்தை பாலியல் ரீதியாக தவறாக சித்தரித்து அனுப்பி இருந்தனர். இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்ந்து கொண்டு இருந்ததால், கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி மாணவி ஈரோடு சைபர் குற்றப்பிரிவு போலீஸ் பிரிவுக்கு சென்று வாய்மொழி புகார் அளித்தார். அப்போது குறிப்பிட்ட செயலியை செல்போனில் இருந்து அகற்றும்படி போலீசார் அறிவுறுத்தினா். உடனடியாக மாணவியும் செல்போனில் இருந்து டெலிகிராம் செயலியை அழித்து விட்டார்.

பாலியல் தொல்லை

ஆனால், மாணவியின் ஆபாச படங்கள் அவரது தனிப்பட்ட செல்போன் எண், மாணவியின் தாயாரின் தனிப்பட்ட செல்போன் எண்களுக்கு வந்தது. இதனால் மிகவும் மனம் உடைந்த மாணவியும், அவரது தாயாரும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் தொடர்ந்து 'மார்பிங்' செய்த புகைப்படங்கள் அனுப்பி வரும் எண்களை குறிப்பிட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி, மாணவியின் தோழிகள், நண்பர்களின் எண்களுக்கும் மாணவியின் பாலியல் ரீதியான படங்களை அனுப்பி வைத்து இருப்பதுடன், வீடியோ கால் செய்தும் துன்புறுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார். பகல் நேரத்தில் மட்டுமே இதுபோன்ற அழைப்புகள் வருவதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். புகாரில் கூறப்பட்டு உள்ள எண்கள் இந்திய எண்கள் இல்லை.

மாணவியுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.


Next Story