பாலியல் தொல்லை; கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம்
பாலியல் தொல்லை; கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் கல்லூரி நிர்வாகம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக உதவி பேராசிரியர் லியோ ஸ்டான்லியை 6 மாதத்துக்கு பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதுகுறித்து பேராசிரியர் கூறுகையில், இந்த புகாரில் அரசியல் உள்ளது. நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்னால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. கல்லூரியின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளதால் கல்லூரி சார்பில் எடுத்த நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு, பணியிடை நீக்க உத்தரவை பெற்றுக்கொண்டேன் என்றார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.