4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு; பெட்டிக்கடைக்காரர் போக்சோவில் கைது


4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு; பெட்டிக்கடைக்காரர் போக்சோவில் கைது
x

4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெட்டிக்கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளி அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று 4-ம் வகுப்பு படித்து வரும் அரசு பள்ளி மாணவி ஒருவர் கடைக்கு பென்சில் வாங்க சென்றுள்ளார். அப்போது, நடராஜன் அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மாணவி அழுது கொண்டே தனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் நடந்த விவரத்தை கூறினாள்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாணவியின் பெற்றோர் வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் நடராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story