8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில்ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
அறச்சலூர் அருகே உள்ள கூத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யாவு (வயது 77). இவர் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரித்து வருவது வழக்கம்.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி ஒரு வீட்டில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரிக்க சென்றார். அப்போது, அங்கு ஒரு வீட்டின் குளியலறையில் 8 வயது சிறுமி குளித்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார். உடனே அவர் அத்துமீறி உள்ளே நுழைந்து சிறுமியை கட்டி பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில்
இதனால் சிறுமி பயந்து போய் கூச்சல் போட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த அய்யாவு, சிறுமியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போக்சோ உள்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யாவுவை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அய்யாவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.