சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தந்தை உள்பட 2 பேர் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தந்தை உள்பட 2 பேர் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தந்தை உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு அவளது தந்தை மற்றும் தந்தையின் நண்பரான திருவெறும்பூர் அருகே உள்ள கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த வெல்டரான கணேசன்(வயது 35) ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி, தனது தாயிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அந்த சிறுமி இது குறித்து தனது உறவினரிடம் கூறியுள்ளார். இதுபற்றி அவரது உறவினர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் நல காப்பக நிர்வாகி பிரபு அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார், அந்த சிறுமியின் தந்தை மற்றும் கணேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.


Next Story