சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணஜெயஆனந்த் கூலித்தொழிலாளி மணிகண்டனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story