பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் போக்சோவில் கைது


பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் போக்சோவில் கைது
x

பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூரை சேர்ந்தவர் பி.அங்கமுத்து (வயது 80). சம்பவத்தன்று இவர் அங்கன்வாடிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 3 வயது பெண் குழந்தையை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை கண்ட ஒருவர் இதுகுறித்து குழந்தையின் தாயிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கோபிநாத். இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அங்கமுத்துவை கைது செய்தனர்.


Next Story