சிறுமிக்கு பாலியல் தொல்லை ; தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த முதியவரை கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி பகுதிைய சேர்ந்த தம்பதியினர், பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்லும் போது தங்களின் 9 வயது சிறுமியை பள்ளி விடுமுறை நாட்களில் கட்டிட தொழிலாளி மாரிமுத்து (வயது 52) என்பவரின் வீட்டில் விட்டு, விட்டு வேலைக்கு செல்வதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த போது மாரிமுத்து பல முறை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சைல்டுலைன் அமைப்பில் புகார் செய்தனர். அந்த அமைப்பை சேர்ந்த சாந்தி என்பவர் சிறுமியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திலகராணி வரதராஜ் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தார்.