மாணவிக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் போக்சோவில் கைது


மாணவிக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் போக்சோவில் கைது
x

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரை சேர்ந்தவர் பரணி (வயது 59). இவர், வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், அந்த பள்ளியில் பயிலும் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி, பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து பெற்றோர் மற்றும் கிராம இளைஞர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் பரணி மீது நடவடிக்கை எடுக்க கோரினர். தகவல் அறிந்த வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தீபிகா, அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பரணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

1 More update

Next Story