சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை;வாலிபர் மீது வழக்குப்பதிவு


சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை;வாலிபர் மீது வழக்குப்பதிவு
x

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவனை வாலிபர் ஒருவர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் தந்தை சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story