மகள்களுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மகள்களுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஈரோடு

மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மகள்களுக்கு தொல்லை

ஈரோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தனது சொந்த மகள்களுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து சிறுமிகள் குழந்தைகள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி எண் 1098-ல் புகார் தெரிவித்தனர். இந்த தகவல் ஈரோடு மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு சென்றது. உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு இதுபற்றி விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

அவரது உத்தரவின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு உளவியல் ஆலோசகர் சொ.ஞானசேகரன், மாவட்ட சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீலேகா ஆகியோர் சிறுமிகள் படித்து வந்த பள்ளிக்கூடத்துக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது 14 மற்றும் 13 வயதுடைய சிறுமிகளுக்கு சொந்த தந்தையே பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.

கைது

இதைத்தொடர்ந்து கடந்த 14-12-2021 அன்று ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

5 ஆண்டு சிறை

வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு தலா 5 ஆண்டுகள் வீதம் சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.

எனவே அவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி ஆர்.மாலதி பரிந்துரை செய்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.


Next Story