கள்ளக்குறிச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி நிர்வாகி போக்சோவில் கைது


கள்ளக்குறிச்சியில்    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை    தனியார் பள்ளி நிர்வாகி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி நிர்வாகி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி


பாலியல் தொல்லை

கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 62). கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் சாலையில் ஸ்ரீ கிருஷ்ணபெருமாள் நர்சரி அண்டு பிரைமரி பள்ளியை நடத்தி வருகிறார். இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜமாணிக்கம் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தனது அறைக்கு அழைத்துச் சென்று நான்தான் விஷ்ணு பகவான் எனவும், என்னை நன்றாக பார் நான் தான் கடவுள் என்றும், என் கண்ணையே பார் எனக்கு நெற்றிக்கண் உள்ளது எனக்கூறி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

போக்சோ சட்டத்தில் கைது

மேலும் இதனை வெளியில் சொன்னால் சாபம் கொடுத்து உன்னை அழித்து விடுவேன் எனவும் அந்த மாணவியை மிரட்டியதாகவும் தெரிகிறது. இதேபோல் மேலும் 2 மாணவிகளுக்கும் ராஜமாணிக்கம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, பள்ளி நிர்வாகி ராஜமாணிக்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story