சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை


சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
x

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி பொன்மலை பகுதியில் 4 வயது சிறுமி, விளையாடுவதற்காக, ஒரு சிறுவன் வீட்டுக்கு சென்றார். அப்போது சிறுவனின் தந்தை சங்கர் (வயது 32) சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், சங்கரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீவட்சன் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஜாகீர் உசேன் ஆஜர் ஆனார்.

இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்ட சங்கர் மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு போக்சோ சட்ட பிரிவு 5 (1) மற்றும் 5 (எம்) ஆகிய 2 பிரிவுகளில் தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.


Next Story