விழுப்புரத்தில் பரபரப்பு:5 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்4 சிறுவர்கள் கைது


விழுப்புரத்தில் பரபரப்பு:5 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்4 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 5 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்


விழுப்புரம் பகுதியில் வசிக்கும் சுமார் 6 வயதுடைய 4 சிறுமிகள் மற்றும் வடமாநில தொழிலாளி ஒருவரின் 6 வயது மகள் உள்பட 5 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 14 வயது முதல் 17 வயதுடைய 4 சிறுவர்கள், செல்போனில் ஆபாச படம் காண்பித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தைகள், தங்கள் பெற்றோரிடம் சென்று நடந்த சம்பவத்தை பற்றி கூறி அழுதுள்ளனர். இதைக்கேட்டு அவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி அவர்கள், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

4 சிறுவர்கள் கைது

மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருப்பது குழந்தைகள் என்பதால், இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர்களும் உரிய விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அந்த 4 சிறுவர்கள் மீதும் மகளிர் போலீசார், போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் மாவட்ட இளஞ்சிறார் மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி, கடலூரில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story