திருமணம் செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை; கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
திருமணம் செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிவகாசியை அடுத்த திருத்தங்கலை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 9.12.2019 அன்று சிறுமி ஒருவரை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் சதீஷ்குமாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் பரிந்துரை செய்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story