இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது


இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது
x

திசையன்விளை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த அழகப்பபுரம் புதிய தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது 49) தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன இளம்பெண்ணின் வீட்டுக் கதவை இரவு நேரத்தில் தட்டி ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலெட்சுமி வழக்குப்பதிவு செய்து சங்கரனை கைது செய்தார்.

1 More update

Next Story