பள்ளிகளில் பாலியல் வன்முறை: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - முத்தரசன்


பள்ளிகளில் பாலியல் வன்முறை: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - முத்தரசன்
x

பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் பாலியல் வன்முறைகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் பாலியல் வன்முறைகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் சென்னையில் இயங்கி வரும் கலாஷேத்ரா அறக்கட்டளையினர் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் வன்முறை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து புகார் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில மகளிர் ஆணையத் தலைவரும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய முதல்-அமைச்சர் "விசாரணையில் குற்றவாளிகள் உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்துள்ளார்.

பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் பாலியல் வன்முறைகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story